TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

11 Aug 2020

2020--21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளில் 17.8. 2020 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் - முதல்வர் அறிவிப்பு



அனைவருக்கும் வணக்கம்

  மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தற்போது 2020--21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில்        17.8. 2020 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள் இதேபோன்று பள்ளி மாற்றம் காரணமாக பிற வகுப்புகளில் 2 முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்கள் அதனைத்தொடர்ந்து 2020--21 ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் மேல்நிலைக்கல்வி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 24. 8. 2020 அன்று முதல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்கள் எனவே இதற்கான ஆயத்தப் பணிகளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்திட உரிய அறிவுரை வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை கேட்டுக்கொள்கிறேன்.  இப்பணிகளை பள்ளிகளில் மேற்கொள்ளும் போது கண்டிப்பாக சமூக இடைவெளிக் கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்பட வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை கேட்டுக்கொள்கிறேன் எனவே அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை கொண்டு ஆயத்த பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விரிவாக பார்க்க முதல்வரின் அறிக்கை click here



No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/