நீதிமன்றங்களில் இனி பச்சை நிற லீகல் சைஸ் பேப்பருக்கு வேலையில்லை
நீதிமன்றங்களில் இனி மனுக்களை தாக்கல் செய்ய பச்சை நிற லீகல் சைஸ் பேப்பரை தேடி அலைய வேண்டியதில்லை. வெள்ளை நிற ஏ4 பேப்பரில் மனுக்களை தாக்கல் செய்தால் போதும் என உயர் நீதிமன்ற பதிவுத் துறை உத்தர விட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை உள்ளிட்ட தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன் றங்களிலும் பிரமாண பத்திரங்கள், பிராதுகள், ஆவணங்கள், உத்தரவு நகல்கள், வக்காலத்து நாமா மற்றும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய 100 ஜிஎஸ்எம் தரம் கொண்ட பச்சை நிற ஃபுல்-ஸ்கேப் லீகல் சைஸ் பேப்பர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
பொதுவாக நீதிபதிகள் படிப்ப தற்காக தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரங்கள், மனுக்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் பச்சை நிற லீகல் சைஸ் பேப்பர் களிலும், பிரதிவாதிகளுக்கான
மனுக்கள் வெள்ளை நிற பேப்பர் களிலும் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தற்போது இந்த நடை முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி உரிமையியல் நடை முறை சட்டம் - 1908, பிரிவு 122-ன் கீழ் உரிமையியல் விதிகளுக்கான தொழில் நெறி பயிற்சி மற்றும் சுற்றறிக்கைக்கான உத்தரவுகள்- விதி6-ல்சிலதிருத்தங்களைதமிழக அரசின் அனுமதியுடன் சென்னை உயர் நீதிமன்றம் கொண்டுவந் துள்ளது. இந்த திருத்தங்கள் குறித்த அறிவிப்பாணை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அனைத்து நீதிமன்றங்களுக்கும் பிறப்பித்த உத்தரவில், 'நீதிமன் றங்களில் தாக்கல் செய்யப்படும் அனைத்து பிராதுகள், எழுத்துப் பூர்வமான வாதங்கள், மனுக்கள், பிரமாணப் பத்திரங்கள், மேல் முறையீட்டு மனுக்கள் இனி 75 ஜிஎஸ்எம் கொண்ட வெள்ளை நிற ஏ4 பேப்பரில் தாக்கல் செய்தால் போதும். முன்பக்கம் மற்றும் பின்புற பக்கங்களில் மனுக்களை
தாக்கல் செய்யும்போது அதற்கான பக்கங்களை நம்பர்களில் குறிப்பிட வேண்டும். மேல்முறையீட்டு மற் றும் அசல் வழக்குகளுக்கானஆவ ணங்களை தாக்கல் செய்யும்போது ஏ4 சைஸ் பேப்பரில் மேல்புறம் மற்றும் அடிப்பக்கத்தில் இருந்து 2.5 செமீ அளவுக்கும், இடது புறத்தில் 3 செமீஅளவுக்கும்,வலது புறத்தில் 2.5 செமீ அளவுக்கும் மார்ஜின் விட வேண்டும்' என்று
அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் கூறியதாவது:
வழக்கமாக நீதிபதிகளின் கவ னத்துக்காக அல்லது படிப்பதற் காகதாக்கல் செய்யப்படும் எல்லா மனுக்களும் பச்சை நிற லீகல் சைஸ் பேப்பர்களில் தாக்கல் செய் யப்படுவது வழக்கம். தற்போது அனைத்து ஆவணங்களையும் ஏ4 சைஸ் வெள்ளை பேப்பரில் தாக்கல் செய்தால் போதும் என உயர்நீதிமன்ற பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. முன்பு வழக் கின் பிரதான கோரிக்கை தொடர் பான பிரமாணப் பத்திர மனுவை, ஒவ்வொரு இடையீட்டு கோரிக்கை
மனுக்களுக்கும் சேர்த்து, சேர்த்து வைத்து தாக்கல் செய்ய வேண் டும். இதனால் பக்க எண்ணிக்கை அதிகரிப்பதுடன், பேப்பர், டைப் பிங் என செலவும் அதிகம். தற் போது ஒரே பிரதான மனுவில் அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றாக சேர்த்து ஒரே பிரமாண பத்திரமாக ஏ4 சைஸ் பேப்பரில் தாக்கல் செய்தால் போதும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்ஜின் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எழுத்து அளவு (Font) குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.'
அதேபோல, இந்த புதிய நடை முறை இன்னும் முழுமையாக உயர் நீதிமன்றத்தில் வரவில்லை. பழைய நடைமுறைப்படி பச்சை நிற லீகல் சைஸ் பேப்பர்களிலும், புதிய நடைமுறைப்படி வெள்ளை நிற ஏ4 சைஸ் பேப்பர்களிலும் வழக்கறிஞர்கள் மனுக்களை தாக் கல் செய்து வருகின்றனர். இரண் டையும் பதிவுத் துறை ஏற்று வரு கிறது. அதேநேரம், மனுதாரர்களின் அனுமதி தொடர்பாக வழக்கறி ஞர்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வக்காலத்து நாமா
அனைத்தும் ஏற்கெனவே பச்சை நிற லீகல் சைஸ் பேப்பர்களில், வழக்கறிஞர்களின் பெயர் உள் ளிட்ட விவரங்களுடன் அச்சடித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை யும் வெள்ளை நிற ஏ4 சைஸ் பேப் பர்களில் தாக்கல் செய்ய வேண் டுமா என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தற்போது கரோனா காலகட் டம் என்பதால் வழக்கறிஞர்கள் மனுக்களை தாக்கல் செய்வதும், வாதிடுவதும் ஆன்லைன் மூலமா கவே நடந்துவருகிறது. பெரும்பா லான ஸ்கேனர் மிஷின்கள் யுனிவர் ஸல் சைஸ் எனப்படும் ஏ4 சைஸ் அளவு கொண்ட பேப்பர்களை ஸ்கேன் செய்யும் அளவுக்கே வடிவமைக்கப்பட்டுள்ளது. பச்சை நிறம் கொண்ட லீகல் பேப்பர் களை தேடி அலைந்து வாங்கி, அதைஸ்கேன் செய்வதற்கும் உரிய மிஷின்கள் உள்ள இடங்களை வழக்கறிஞர்கள் தேடிச்செல்லும் நிலை இருந்தது. தற்போது ஏ4 பேப்பர்களில் மனு தாக்கல் செய்ய லாம் என்பதால் அந்த கஷ்டம் வழக்கறிஞர்களுக்கு இனி இருக் காது. இவ்வாறு அவர் கூறினார்.
TAMIL EDUCATION 360 TEAM

No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/