தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கணினி பயிற்றுநருக்கான தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 6 மாத காலம் கடந்த நிலையிலும் பணி நியமனம் பெறாமல் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகிளில் சுமார் 800க்கும் மேற்பட்ட கணினி பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு கடந்த ஜீன் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்தி அதற்கான தற்காலிக தேர்வாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சுமார் 697 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 117 பணியிடங்களுக்ககான முடிவு மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வழக்குகள் தாமதமாக முடிந்து , 117 இடங்கள் தனியாக நிரப்பப்பட்பால் தர வரிசையில் சிக்கல்களும் , இட ஒதுக்கீட்டில் பல்வேறு குழப்பங்களும் ஏற்படும். ஏற்கெனவே முதுகலை வேதியியல் ஆசிரியர் தேர்வில் இதுபோல இட ஒதுக்கீடு சிக்கல் எழுந்ததால் , அப்போது வெளியிடப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. எனவே , தமிழக அரசு காலிப்பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 824 பேருக்கும் மொத்தமாக , இறுதிப் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/