பள்ளிக் கல்வித்துறையின்கீழ் செயல்படும் முதன்மை / மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றிவரும், ஆசிரியரல்லாதப் பணியாளர்கள் (Non Teaching Staff) மற்றும் நிருவாகம் சார்ந்த பணியாளர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்கள் சார்பான விவரங்களை இணையதளத்தில் (EMIS) இல் 24.08.2021 அன்று பதிவேற்றம் செய்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பார்வையில் காணும் செயல்முறைகளின்படி அறிவுறுத்தப்பட்டது.
மேற்படி பொருள் சார்பாக, முதன்மைக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் (முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை/உயர்நிலை), சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் (Eco Co ordinator), கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (EDC), முறையான கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் இதரப் பணியாளர்கள்) சார்பாக முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கென அளிக்கப்பட்டுள்ள User Name / Password ஐ பயன்படுத்தி, இணையதளத்தில் (EMIS) பதிவேற்றம் செய்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
அதுபோலவே, மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பள்ளித்துணை ஆய்வர் (Deputy Inspector of School) உட்பட அனைத்துப் பணியாளர்கள் சார்பாக மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கென அளிக்கப்பட்டுள்ள User Name / Password ஐ பயன்படுத்தி, இணையதளத்தில் (EMIS) பதிவேற்றம் செய்திடவும், வட்டாரக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்கள் சார்பான விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கென அளிக்கப்பட்டுள்ள User Name / Password ஐ பயன்படுத்தி இணையதளத்தில் (EMIS) பதிவேற்றம் செய்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.
Pdf click here
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/