கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவதற்கு இயலாமையின் காரணமாக மருத்துவச் சான்றின் அடிப்படையில் - அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வயதை 50லிருந்து 53 ஆக உயர்வு
அரசு ஆணை (நிலை) எண்.168 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (க்யூ1) துறை
நாள்: 19.10.2000
பார்வை 3ல் படிக்கப்பட்ட நேர்முகக் கடிதத்தில் 5.8.2000 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் 55வது மாநில மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு ஏற்பதாக அறிவித்த கோரிக்கைகள், மேல் நடவடிக்கைக்காக இத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ள. அதில் முதல் கோரிக்கை அரசு ஊழியர்கள் பணியிலிருந்து மருத்துவ சான்றின் அடிப்படையில் இயலாமை ஓய்வு பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதினை 50லிருந்து 53 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்பதாகும்.
2. பார்வை 1ல் உள்ள அரசு ஆணை (நிலை) எண்.1025 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை நாள் 22.11.76ல் மருத்துவ சான்றின் பேரில் இயலாமை காரணமாக பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்க தேர்வாணையத்தின் வரம்பிற்குட்படாத பதவியில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டது. அதே போன்று அரசு ஆணை எண்.554 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை நாள் 9.4.99ல் தேர்வாணைய வரம்பிற்குட்பட்ட பதவியில் இத்தகைய நியமனம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
3. பார்வை 2ல் படிக்கப்பட்ட அரசு கடிதத்தில் வயது முதிர்வின் காரணமாக பணியிலிருந்து ஓய்வுபெறும் தருவாயில் (fag end of the service) மருத்துவ ரீதியாக இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் தங்கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படயில் பணி நியமனம் பெறும் நிலை ஏற்பட்டதன் காரணமாக நடைமுறையிலிருந்த அரசு ஆணையை ஆய்வு செய்து இயலாமை காரணமாக மருத்துவசான்றின் அடிப்படையில் 50 வயதிற்குள் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர் மட்டுமே கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறத் தகுதியுடைவர் என்று உச்ச வயது வரம்பு செய்து வெளியிடப்பட்டது.
4. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 5.8.2000 அன்று மருத்துவ சான்றின் அடிப்படையில் அரசு ஊழியர் இயலாமை ஓய்வு பெறும் வயது 50லிருந்து 53 ஆக உயர்த்தக் கோரும் கோரிக்கைக்கு ஏற்பணித்துள்ள நிலையில், 53 வயதிற்குள் அரசுப் பணியிலிருந்து மருத்துவச் சான்றின் அடிப்படையில் இயலாமை ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வாரிசுதாரர் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற தகுதியுடையவர் என்று அரசு ஆணையிடுகிறது.
5. இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் இயலாமை காரணமாக பணி ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஏற்கனேவ முடிவெடுக்கப்பட்ட இனங்களுக்குப் பொருந்தாது என்றும் மேலும் விதித்தளர்வுகள் கோரும் கோரிக்கைகளை ஏற்க இயலாது என்றும் ஆணை வெளியிடப்படுகிறது.
6. மேற்கண்ட ஆணை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறையின் அலுவல் சார்பற்ற குறிப்பு கண்.46449/ஜி/2000-1 நாள் 25.8.2000ல் பெறப்பட்ட ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/