TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

18 Sept 2021

அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பினை ஆண்டுகள் உயர்த்துதல் - ஆணைகள் - வெளியீடு..


மனிதவள மேலாண்மைத் (எஸ்)துறை

அரசாணை (நிலை) எண்.91

நாள்: 13.09.2021

பொதுப் பணிகள் - 2021-2022-ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களால் சட்டமன்ற பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு - அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பினை ஆண்டுகள் உயர்த்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

ஆணை

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், 13.09.2021 அன்று நடைபெற்ற 2021-2022- ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, கொரோனா பெருந்தொற்று காரணமாக, பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால், நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என மாண்புமிகு அமைச்சர், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2 மாண்புமிகு அமைச்சர், நிதி மற்றும் மனிதவள மே ன்மை அவர்களின் மேற்குறிப்பிட்ட அறிவிப்பிற்கிணங்க, பின்வருமாறு ஆணைகள் வெளியிடப்படுகின்றன:

i) அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு, தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. 

ii) தொடர்புடைய பணி விதிகளில், மேற்குறிப்பிட்ட அளவிற்கும் குறைவான வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கும், தற்போது உயர்த்தப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு அளவு பொருந்தும்.

iii) மேற்குறிப்பிட்ட அளவிற்கும் அதிகமாக வயது உச்ச வரம்பினைக்

கொண்டுள்ள பதவிகளைப் பொறுத்த வரையில், தொடர்புடைய

பணி விதிகளில் நிர்ணயிக்கப் பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படுகிறது.

iv) பட்டியலினத்தவர், பட்டியலின அருந்ததியர், பழங்குடியினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (வ), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினர்களிலும் (All Castes) உள்ள ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு, 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு நீட்டிப்பு அல்லது தளர்வுகள் தொடரும்.

v) கருணை அடிப்படையிலான நியமனங்களை பொறுத்த வரையில், தற்போது நடைமுறையில் உள்ள வயது உச்ச வரம்பானது மாற்றம் ஏதுமின்றி தொடரும்.

vi) தற்போது உயர்த்தப்படும் வயது உச்ச வரம்பானது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரிவு முகமைகள் (Recruiting Agencies) மற்றும் நியமன அலுவலர்களால் (Appointing Authorities), இவ்வரசாணை வெளியிடப்படும் நாள் முதலாக அறிவிக்கை (Notification) செய்யப்படும் பணியாளர் தெரிவுகள் அனைத்திற்கும் (Recruitment) பொருந்தும்.

vii) இவ்வாணைகளின் அடிப்படையில், தொடர்புடைய
பணி விதிகளில் (Special | Adhoc Rules) உரிய திருத்தங்களை
உடனடியாக மேற்வொள்ளுமாறு தலைமைச் செயலக துறைகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
 

Tamil Education 360 Team.

No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/