பொதுப் பணிகள் - 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி
பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் - மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினை செயல்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள்-வெளியிடப்படுகின்றன.
குறிப்பிட்ட பதவிக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பணி விதிகளில், நேரடி நியமன முறைக்காக வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை தமிழ் வழியில் பயின்றவர்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட 20 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடைவர்கள் என்ற வகையில், பார்வை நான்கில் காணும் திருத்தச் சட்டத்தின் மூலமாக உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அச்சட்டத்திருத்தத்தில் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது:.
(i) வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியானது 10ஆம் வகுப்பாக இருப்பின், 10-ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்றிருக்க வேண்டும்;
(ii) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது மேல்நிலை வகுப்பாக (12-ஆம் வகுப்பு) இருப்பின், 10-ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்பினை பயின்றிருக்க வேண்டும்: தமிழ் வழிக் கல்வியில்
(iii) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது பட்டயப் படிப்பாக
(Diploma) இருப்பின், 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டயப்
படிப்பினை தமிழ் வழி கல்வியில் பயின்றிருக்க வேண்டும்;
அல்லது, மேல்நிலை வகுப்பிற்குப் பின் பட்டயப் படிப்பினை முடித்திருந்தால், 10-ஆம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பினை தமிழ் வழி கல்வியில் பயின்றிருக்க வேண்டும்:
(iv) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது பட்டப் படிப்பாக இருப்பின், 10-ஆம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப் படிப்பினை தமிழ் வழி கல்வியில் பயின்றிருக்க வேண்டும். (v) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது முதுகலைப் பட்டப் படிப்பாக இருப்பின், 10-ஆம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு, பட்டப்
படிப்பு மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பினை தமிழ் வழி
கல்வியில் பயின்றிருக்க வேண்டும்.
Click here pdf
you can follow us at :
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/