புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தைப் பயன்படுத்தும் முறை தெளிவுரை அனுப்புதல்..!
இந்தப் புத்தாக்கப்பயிற்சிக் கட்டகம் அனைத்துப் பகுதி மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு கீழ்க்கண்டவாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
IX, X வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டிய மிக அடிப்படையான பாடக்கருத்துக்கள் (Fundamental Concepts) முதலில் கொடுக்கப்பட்டிருக்கும்.
. அடுத்து, முந்தைய வகுப்பு வரையிலான அடிப்படை மற்றும் முக்கிய கருத்துகள் (Basic and Critical Concepts) கொடுக்கப்பட்டிருக்கும்.
. அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்களில் முந்தைய வகுப்பு வரையிலான அடிப்படை மற்றும் முக்கிய பாடக்கருத்துகள் (Basic and Critical Concepts) மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும்.
மிக அடிப்படையான பாடக்கருத்துகளில் (Fundamental Concepts) கற்றல் அடைவு போதிய அளவு மாணவர்கள் பெற்றிருப்பின், அடுத்ததாக உள்ள அடிப்படை மற்றும் முக்கியப் பாடக்கருத்துகளைக் (Basic and Critical concepts) கற்பிக்கலாம்.
செப்டம்பர் 1 -ம் நாள் பள்ளி திறந்தவுடன் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள பாடப்பொருளைக் கற்பிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஆய்வு அலுவலர்கள், மாவட்டங்களுக்கு, பள்ளி திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்குச் சென்றபோது சில பள்ளிகளில் Online மூலம் முறையாக கால அட்டவணை தயாரிக்கப்பட்டு பாடங்கள் முடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பள்ளிகளில் உள்ள இடவசதிக்கேற்றவாறு மாணவர்களை தினசரி வரவழைக்கும் நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான வகுப்புகள் நடைபெற வாய்ப்பு இல்லாமல் உள்ளது. உதாரணமாக சில பள்ளிகளில் IX - XII வகுப்புகள் தினசரி வருகை புரியவும், சில பள்ளிகளில் X, XII வகுப்பு மாணவர்கள் தினசரியும், IX, XI வகுப்பு மாணவர்கள் ஒரு நாள் விட்டு ஒருநாளும் வருகை புரியுமாறு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்துப் பள்ளிகளும் ஒரே மாதிரியாக கட்டகத்தைப் பயன்படுத்த தேவை எழாத நிலை உருவாகியுள்ளது.
எனவே, ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும், பள்ளியில் ஒவ்வொரு பாட ஆசிரியரும் எந்த அளவுக்கு முந்தைய வகுப்பில் உள்ள பாடங்கள் மற்றும் தற்போதைய வகுப்பில் உள்ள பாடங்கள் ஆகியவற்றைக் கற்பித்து உள்ளனர் என்பதையும், மாணவர்களின் கற்றல் நிலை ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடத்திலும் எந்த நிலையில் உள்ளது என்பதையும், ஆசிரியர் உதவியுடன் ஆய்வு செய்து, அதற்கேற்றவாறு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முந்தைய வகுப்புகளுக்கு விடுமுறையின் போது Online மூலம் வகுப்புகள் முறையான நடைபெற்றிருந்தால் முந்தைய வகுப்புகளுக்கான அடிப்படை மற்றும் முக்கிய கருத்துகள் (Basic and Critical Concepts) கற்பிக்கப்படவேண்டிய கால அளவை பாட ஆசிரியர்களே நிர்ணயித்துக் கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Online மூலம் வகுப்புகள் நடைபெற்ற போது, அதில் கலந்து கொள்ளாத, சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு அதற்கேற்றவாறு திட்டமிட்டு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள பாடக்கருத்துகளை 45 - 50 நாட்களுக்குள் கற்பிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களின் கற்றல் அடைவின் நிலைக்கு ஏற்ப, முறையாகத் திட்டமிட்டு, புத்தாக்க பயிற்சிக் கட்டகத்தில் உள்ள பாடக்கருத்துகளைக் கற்பிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TAMIL EDUCATION 360🖌📚✍.
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/