தினமும் 3 மணி நேரம் கரண்ட் கட்.. அரசு அறிவிப்பு - அதிர்ச்சியில் மக்கள்..!
அத்துடன், பல்வேறு மாநிலங்களும் நிலக்கரி பற்றாக்குறையால் மின்தடைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், மின் விநியோகத்துக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 'இனிமேல் நாள்தோறும் 3 மணி நேரம் கட்டாய மின்வெட்டு நடைமுறையில் இருக்கும்' என்று பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்த 3 மணி நேரம் மின்வெட்டு என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் இனி மின்வெட்டு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுவதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/