வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் சத்யபிரதா சாகு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது படிவங்களின் மீது தீர்வு காண்பது குறித்து தெரிவிக்கப்படும். அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் பரிசீலிக்கப்படும். ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும். கோரிக்கை மற்றும் மறுப்புரைகளை நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நவம்பர் மாதம் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கலாம்.
அவர்கள் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருத்தங்கள் போன்றவற்றுக்கு உதவி செய்யலாம். வாக்குச்சாவடி முகவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பற்றி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் நிர்ணயிக்கப்பட்ட படிவங்களில் தகவல் தரலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
For Whatsapp Group
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/