TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

13 Oct 2021

*தொடக்கக்கல்வி - ஆங்கில வழி பாடப்பிரிவு - சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் அனுமதி வழங்க தெரிவித்தல்*

தொடக்கக்கல்வி - ஆங்கில வழி பாடப்பிரிவு - செயல்படும் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் அனுமதி வழங்க தெரிவித்தல்


தொடக்கக் கல்வி துறையின் கீழ் செயல்படும் நிதியுதவி/ பகுதிநிதியுதவி/ சுயநிதி தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கருத்துருக்கள் சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சார்ந்த பள்ளியை பார்வையிட்டு அதன்படி கருத்துருக்கள் பரிந்துரையுடன் பெறப்பட்டு அவை பார்வை 2 ல் காணும் அரசாணைகளின்படி பரிசீலிக்கப்பட்டு உரிய அனுமதி இவ்வியக்ககத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

பார்வை 1 ல் காணும் அரசாணையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சில அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6-10 வகுப்புகளில் ஆங்கில வழிப்பிரிவு துவங்க அனுமதியினை உரிய அரசாணைகளின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் அனைத்து மாவட்டத்தில் செயல்படும் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கோப்பின் தன்மையை கருதி கருத்துருக்களை பார்வை 2 ல் காணும் அரசாணையில் தெரிவித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் முழு அளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை நன்கு பரிசீலித்து, ஆங்கில வழிப்பிரிவு துவங்க அனுமதியினை 50% பிரிவுகள் கண்டிப்பாக தமிழ்வழிப் பிரிவுகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

உதாரணமாக ஒரு பள்ளியில் 4 பிரிவுகள் இருந்தால் 2 பிரிவுகள் தமிழ்வழி பிரிவாகவும், 2 பிரிவுகள் ஆங்கில வழி பிரிவாகவும் செயல்பட அனுமதி வழங்கலாம்,' 3 பிரிவுகள் இருந்தால் 2 பிரிவுகள் தமிழ்வழி பிரிவாகவும், 1 பிரிவு ஆங்கில வழி பிரிவாகவும் செயல்பட அனுமதி வழங்கலாம்: 1 பிரிவு மட்டும் செயல்பட்டால் அது தமிழ்வழி பிரிவாகவே செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்படுகிறது.

மேலும் இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள லிங்க் மூலம் எங்கள் குழுவில் இணையவும் 




For Whatsapp 







 தயவு கூர்ந்து யாருக்காவது அல்லது குழுவிற்கு பகிரவும் ஒருவர் பயன் அடைந்தாலும் சிறப்பு.





No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/