சின்னம் ( Logo with Tag Line ) உருவாக்கினால் ரூ.25,000 பரிசு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!! *
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை " இல்லம் தேடிக் கல்வி " பத்திரிகைச் செய்தி :
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும்
• கொரோனா பெருந்தொற்றுப்
மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைச் சரிசெய்தல்.
• பள்ளி நேரத்தைத் தவிர. மாணவர்கள் வசிப்பிடம் அருகே, சிறிய குழுக்கள் தன்னார்வலர்களின் பங்கேற்புடன்
மூலம்
மாணவர்களுக்குக் கற்றல் வாய்ப்புகளை வழங்குதல்,
• மாணவர்கள் பள்ளிச் சூழலின் கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை "இல்லம் தேடிக் கல்வி" திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல்,
தன்னார்வலர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதைப் போலவே. 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப் படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ள இச்சிறப்புத் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் நகர் / ஊரகப் பகுதி மக்களிடையே எளிதாக கொண்டு சேர்க்கும் வகையிலும் மற்றும் இத்திட்டத்தின் ஒட்டு மொத்த இலக்கை மிக எளிதாக மக்களுக்கு உணர்த்தவும் இத்திட்டத்திற்கான சின்னம் (Logo with Tag Line)மக்கள் பங்கேற்புடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சின்னம் (Logo with Tag Line) உருவாக்கும் போட்டி 24.10.2021க்குள் நடத்தப்படவுள்ளது. இதில் அனைத்து நகர் / ஊரகப் பகுதியில் உள்ள பள்ளி / கல்லூரி மாணவர்கள், பெண்கள். ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்கலாம். வயது வரம்பு ஏதும் இல்லை.
போட்டியாளர்களால் தயாரித்து வழங்கப்படும் சின்னம்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் இறுதி செய்யப்படும். சிறந்த மற்றும் பொதுமக்களுக்கு எளிய வகையில் புரிந்திடும் வகையிலான சின்னத்தை உருவாக்கும் ஒரு வெற்றியாளருக்கு ரூபாய் 25,000/- ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டியாளர்கள்
தங்களின்
இறுதிப்படைப்பினை
illamthedikalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.10.2021 மாலை 5.00 போட்டியாளர்களால் வழங்கப்படும் சின்னத்தை இறுதி செய்யும் பொறுப்பு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையை சார்ந்ததாகும்.
போட்டியாளர்கள் தங்களின்
இறுதிப்படைப்பினை
illamthedikalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.10.2021 மாலை 5.00 போட்டியாளர்களால் வழங்கப்படும் சின்னத்தை இறுதி செய்யும் பொறுப்பு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையை சார்ந்ததாகும்.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
For Whatsapp group
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/