சுற்றறிக்கையால் பணிமாறுதல் செய்யப்பட்ட பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் - நடந்தது என்ன?
"புதிய கல்விக் கொள்கையை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்" என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், "மத்திய அரசு சார்பில் பள்ளி கல்வித் துறைக்கு கடந்த 18ம் தேதி கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பாக இமெயிலில் ஒரு தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. அதற்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என நினைத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் அதை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு வராமல், பதில் அனுப்பியுள்ளார் அவர். மேலும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவரேவும் சர்க்குலர் அனுப்பியிருந்துள்ளார். இப்படி பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குனர் தொடர்ந்த கவனக்குறைவாக செயல்பட்டதால் அவரை தற்போது பணிமாறுதல் செய்துள்ளோம்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றோம். அப்படியிருக்கையில் எங்களுடைய கவனத்திற்கு வராமல் மத்திய அரசின் இமெயிலுக்கு பதில் அளித்து, மாநில அரசிடம் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளார் இணை இயக்குநர். கடந்த ஆட்சியில் அரசு அதிகாரிகள் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் எங்களது ஆட்சியில் அப்படி இருக்கக் கூடாது. இதை உணர்த்தவே அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/