EMIS இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்ட வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களின் முன்னுரிமைப் பட்டியல் ( Seniority List) இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது, மேற்காண் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா எனவும், சம்மந்தப்பட்ட ஆசிரியர் பயிற்றுநரின் முன்னுரிமை, அவரது பணிநியமன மூப்பின் அடிப்படையில் அமைந்துள்ளதா எனவும் நன்கு ஆய்வு செய்து சரியாக உள்ளது என்பதற்கான உறுதி சான்றினை, சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடனும், சம்மந்தப்பட்ட உதவித் திட்ட அலுவலரின் சான்றுடனும் இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) மின்னஞ்சல் முகவரிக்கு (jdpcc2018@gmail.com) அனுப்புமாறு கையொப்பமிட்ட பிரதியை மற்றும் தபால் மூலமாகவும் 12:10.2021ந்தேதி காலை 10 மணிக்குள் அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்காண் முன்னுரிமைப் பட்டியலில் ஆசிரியர் பயிற்றுநர்களின் முன்னுரிமை மற்றும் பிற விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், அத்திருத்தங்கள் குறித்த விவரத்தினை இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) மின்னஞ்சல் முகவரிக்கும் மற்றும் தபால் முலமாகவும் தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அதே போன்று ஆசிரியர் பயிற்றுநர்களின் மாறுதல் விண்ணப்பம் சார்ந்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்களையும் சரிபார்க்குமாறும், சார்ந்த முதன்மைக் கல்வி அறிவுறுத்தப்படுகிறார்கள். அலுவலர்கள்
மேற்காண் விவரங்களில் தவறு ஏதும் பின்னர் கண்டறியப்படின், சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்தாய்வு தொடர்பான பணி மேற்கொள்ளும் முதன்மைக் கல்வி அலுவலர், திட்ட ஒருங்கிணைப்பாளர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் கைப்பேசி எண் (Cell Number) தெரிவிக்குமாறும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Excel file for seniority list
Tamil Education 360 Team

No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/