சென்னை: அரசு தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கை: செப்டம்பர் 2021 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ, மாணவியர்களின் தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், அதேபோல் தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் நாளை (29ம் தேதி) காலை 11 மணி முதல் அறிந்து கொள்ளலாம்.
மேலும்,விடைத்தாள்களின் ஒளிநகல் பெற மற்றும் விடைத்தாள்களை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கட்டணத்தை செலுத்தி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன்படி விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.275, விடைத்தாள் மறுகூட்டலுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.205 செலுத்த வேண்டும்.
மேலும், வரும் ஜனவரி 1ம் தேதி காலை 10 மணி முதல் ஜனவரி 4ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
For Whatsapp Group
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/