TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

13 Nov 2021

பணியமைப்பு - உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு (IIPGCMS) மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கப்பட்டு ஓர் துறையாக செயல்படுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

பணியமைப்பு - உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு (IIPGCMS) மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கப்பட்டு ஓர் துறையாக செயல்படுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.


பார்வை 1, 2 மற்றும் 3-ல் கண்ட அரசாணைகளில் உருவாக்கப்பட்ட

முதலமைச்சரின் தனிப்பிரிவு. முதலமைச்சரின் உதவி மையம் மற்றும்

ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு (Integrated and

Inclusive Public Grievance CM Helpline Managemt System), உங்கள்

தொகுதியில் முதலமைச்சர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு "முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது. 2. மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலுள்ள சிறப்பு அலுவலர் மற்றும் தனிப்பிரிவின் கீழ் தற்போதுள்ள பல்வேறு அலுவலக பிரிவு அலுவலர்கள் "முதல்வரின் முகவரி" துறையின் கீழ் செயல்படுவர்.

முதலமைச்சர் தனிப்பிரிவின்

3. தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கட்டுபாட்டில் இயங்கி வரும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பின் (IIPGCMS), ஒரு முதன்மை பொதுக்குறை தீர்வு அலுவலர் (Chief Public Grievance Redressal Officer) பதவி "முதல்வரின் முகவரி" துறை சிறப்பு அலுவலர் பதவியுடன் இணைக்கப்படுகிறது மற்றும் ஆறு பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர்கள் (Supervisory Public Grievance Redressal Officer) இனி "முதல்வரின் முகவரி" துறை சிறப்பு அலுவலரின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள்.

4. ஒரு பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர் (SPGRO) பதவி மட்டும் மேம்படுத்தப்பட்டு ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குனர் நிலையில் ஓர் அலுவலர் நியமிக்கப்படுவார். அவருடைய நிலைக்கு ஏற்ப அனைத்து சலுகைகள் வழங்கப்படும்.

5. ஆறு பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர் பணியிடங்களுக்கு தேவைப்படும் ஊதியம், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி (HRA), மாநகர ஈட்டுப்படி (CCA). இதர படிகள் அனைத்தும் நடைமுறையிலுள்ள ஆணைகளுக்கிணங்க வழங்கப்படும். இச்செலவு, பொதுத் துறை வாயிலாக சம்பந்தப்பட்ட கணக்குத் தலைப்பு மூலம் மேற்கொள்ளப்படும்.

6. பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர்களுக்கு தேவைப்படும் அனைத்து கட்டமைப்பு வசதிகள், தளவாடங்கள் மற்றும் பிற வசதிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் தொடர்ந்து வழங்கப்படும்.

7. தலைமைச் செயலகத்தில், "முதல்வரின் முகவரி" துறைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகள் வழங்கும் ஒருங்கிணைப்புத் துறையாக பொது (நிர்வாகம்-4)த் துறை செயல்படும்.

8. முதல்வரின் முகவரி துறையின் மனுக்களுக்கு ர்வு காண IIPGCMS helpline மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதளமுகப்பாக (single portal) . பயன்படுத்தப்படும். இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

9. IIPGCMS helpline, தகவல் அழைப்பு மையம், 1100 என்ற தொலைபேசி எண், மனுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காகவும், தகவல்கள் பெறுவதற்காகவும், மனுக்களை பதிவு செய்வதற்காகவும் மற்றும் இதர பணிகளுக்காகவும், இனி முதல்வரின் முகவரி துறையின் கீழ் இயங்கும். இந்த இணையதளம் தொடர்பான அன்றாட செயல்பாடுகள் குறித்து முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலர் பொதுத் துறை செயலாளருடன் கலந்தாலோசித்து முடிவு செய்வார்.

10. IIPGCMS இணையதளமுகப்பு. cmhelpline பராமரிப்பு தகவல் அழைப்பு மையம், 1100 என்ற தொலைபேசி, மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து செலவுகளும் பொதுத் துறையால் மேற்கொள்ளப்படும்.

11. பார்வை 3 மற்றும் 5-ல் படிக்கப்பட்ட ஆணையினைத் தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர், திருமதி ஷில்பா பிரபாகர் சதிஷ், இ.ஆ.ப., அவர்கள் "முதல்வரின் முகவரி" துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார்.



இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group




No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/