TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

13 Jan 2022

_*10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணை இணைப்பு....*_

10, 11, 12-ம் வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்பே சிறந்தது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நேரடி வகுப்புகளுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணை
 இணைப்பு....




கொரோனா 3-வது அலை அதிகரிப்பால் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதால் ஆசிரியர், மாணவர்கள், பணியாளர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு, ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிசம்பர் 27 முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறைக்கு பிறகு ஜனவரி 3ம் தேதி அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்திருந்தது.


ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகளை ரத்து செய்து, ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றுசென்னை உயர்நீதிமன்றத்தில் நெல்லை அப்துல் வஹாபுத்தீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவே நேரடி வகுப்புகளுக்கு அழைப்பு விடுத்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நேரடி வகுப்புகள் நடத்துவது கட்டாயமில்லை, ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது பற்றி பள்ளிகள் முடிவு எடுக்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

10, 11, 12ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த கோரிய மனு தள்ளுபடி

*அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம்* ஆஜராகி மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 9 வரை நேரடி வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது என்றும், 10 முதல் 12 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவே பள்ளிக்கு அழைக்கப் படுபதாகவும், நேரடி வகுப்புகள் நடத்துவதும், கலந்து கொள்வதும் கட்டாயமில்லை எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிகள் முடிவெடுக்கலாம் என்றும் தமிழக அரசு கொள்கை முடிவெடுத்துள்ளதாக மேலும் நேரடி வகுப்புகள் நடத்தினால் கலந்து கொள்வது மாணவர்களின் விருப்பத்திற்குட்பட்டது என்றும் தெரிவித்தார்.


இதனையடுத்து நீதிபதிகள்
அரசின் கொள்கை முடிவை மீறி எவ்வாறு பள்ளிகளை மூடும்படி உத்தரவிட முடியாது 
என்று தெரிவித்து

 *மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.*

*அரசு பிளீடர் (GP) பி.முத்துகுமார்*

*சிறப்பு அரசு வழக்கறிஞர் (SGP)மைத்ரேயி சந்ரு*
ஆஜரானார்கள்

No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/