TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

16 Jan 2022

பள்ளிக்கல்வி - இடைநிலைக் கல்வி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப்பாடம் / ஆங்கில பாடம் - இரு தாள்களாக தேர்வு எழுதும் நடைமுறையை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்திட அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதியளித்து ஆணை - வெளியிடப்படுகிறது. பள்ளிக்கல்வித் (அ.தே) துறை அரசாணை (நிலை) எண்.161 நாள்: 13.09.2019. 10th std language single paper g.o. download

பள்ளிக்கல்வி - இடைநிலைக் கல்வி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப்பாடம் / ஆங்கில பாடம் - இரு தாள்களாக தேர்வு எழுதும் நடைமுறையை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்திட அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதியளித்து ஆணை - வெளியிடப்படுகிறது.

 பள்ளிக்கல்வித் (அ.தே) துறை

அரசாணை (நிலை) எண்.161

நாள்: 13.09.2019

SSLC தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில், ஒரே தாளாக நடத்த அரசு ஆணை!  GO 161, Dated: 13.9.2019


பள்ளிக்கல்வி - இடைநிலைக் கல்வி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப்பாடம் / ஆங்கில பாடம் - இரு தாள்களாக தேர்வு எழுதும் நடைமுறையை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்திட அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதியளித்து ஆணை - வெளியிடப்படுகிறது. பள்ளிக்கல்வித் (அ.தே) துறை

அரசாணை (நிலை) எண்.161

நாள்: 13.09.2019 

திருவள்ளுவர் ஆண்டு 2050 விகாரி வருடம், ஆவணி-27

படிக்கப்பட்டவை:

1. அரசாணை (நிலை) எண்.118, பள்ளிக் கல்வி (அதே) துறை, நாள் 09.06.2018. 

2. அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடித ந.க.எண்.052449/பி1/2019, நாள்.14.05.2019

ஆணை:

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மாணாக்கர்களின் மன அழுத்தத்தினை குறைக்கும் வகையில் அரசுத் தேர்வுகள் இயக்குநரால் நடத்தப்படும் மேல்நிலை முதலாம் / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளில், மொழிப்பாடம் (Language) மற்றும் ஆங்கிலப் (English) பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை (Two Papers) இரண்டு தேர்வுகளாக எழுதுவதற்குப் பதிலாக, ஒரே தாளாக (One Paper) தேர்வெழுத அனுமதித்து ஆணையிடப்பட்டது. இதனடிப்படையில், தற்போது அரசுத் தேர்வுகள் இயக்குநர் மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட தனது கடிதத்தில், இடைநிலை பத்தாம் வகுப்பு (SSLC) தேர்வர்களுக்கும் மொழிப்பாடங்கள் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு இரண்டு தாள்களாக தேர்வுகள் நடத்தப்படுவதை மாற்றி, ஒரே தாளாக தேர்வுகள் நடத்திட வேண்டி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் முறையிட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

2. மேலும் தெரிவிக்கையில், மேற்கண்டவாறு பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் / ஆங்கிலப் பாடங்களில் இரண்டு தாள்களை ஒரே தாளாக மாற்றி அமைப்பதனால் பின்வரும் பயன்கள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்:

மொழிப்பாட/ஆங்கிலப் பாட ஆசிரியர்கள், ஒவ்வொரு தேர்வின்போதும், அதிக நாட்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக செலவிடும் நிலை மாறி கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டு பணியில் அதிக நேரம் செலவிட ஏதுவாகும்.

மொழிப்பாடம் / ஆங்கிலப்பாடத்தில் ஒரே தாளாக தேர்வு எழுதுவதன் காரணமாக, மாணாக்கர்களின் தேர்வு காலம் குறைக்கப்படுவதால் அவர்களின் கவனச்சிதறல் மற்றும் மன அழுத்தம் பெருமளவில் குறையும்.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி நடைபெறும் நாட்கள் குறைவதால் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு ஏற்படும்.

ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை சுமார் பத்து இலட்சம் மாணாக்கர்கள் எழுதுகின்றனர். மொழிப்பாடம் / ஆங்கிலப் பாடத்திற்கு ஒரே தாளாக
தேர்வு நடத்துவதால், சுமார் இருபது இலட்சம் விடைத்தாட்கள் குறையும். இதனால் அரசு மைய அச்சகத்தில் அச்சிடுவதற்காக ஓர் ஆண்டிற்கு பயன்படுத்தப்படும் சுமார் மூன்று கோடி எண்ணிக்கையிலான தாள்களும் சேமிக்கப்படும்.

3. மேற்காணும் சூழ்நிலையில், அரசு தேர்வுகள் இயக்குநர் கருத்துருவினை ஏற்று, ஆசிரியர் சங்கங்கள்/பொதுநல அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், மாணவர்களின் மன அழுத்தத்தினை குறைக்கும் வகையிலும், ஆசிரியர்களை பெருமளவில் கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அதிக நேரம் ஈடுபடுத்தும் வகையிலும், தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு மொழிப்பாடம் / ஆங்கிலப் பாடத்தேர்வுகளில் இரு தாள்களுக்கு தேர்வு நடத்துவதற்குப் பதிலாக, 2019-2020-ம் கல்வியாண்டு முதல் இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்துவதற்கும் அவ்வாறு தேர்வு நடத்தும்போது, பாடங்களின் மதிப்பீடு (Assessment) பாதிக்காதவாறும், முதல் மற்றும் இரண்டாம் தாள்களிலுள்ள அனைத்து பாடங்களில் உள்ள சாராம்சங்களையும் உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்திட அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதியளித்து அரசு ஆணையிடுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

பிரதீப் யாதவ்
அரசு முதன்மைச் செயலாளர்.
அரசாணையின் நகலை pdf வடிவத்தில் பெற click here👆👆

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..



No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/