*பச்சையம் கலந்த மனசு*
சொல்வதற்கு நிறைய இருக்கிறது! ஆனாலும்
சுருக்கமாகச் சொல்லும் சேதி இதுதான்
பருவமடைந்த குருவிகள் கூட்டைவிட்டு
பறந்து செல்வது இயல்பே! மகனே வாழ்க!
வறட்டூரில் பெண்ணாய்ப் பிறந்து வளர்ந்து
கரட்டூரில் வாக்கப்பட்ட பொழுதில்
பறித்து நட்ட நாற்றென நானும்
புதிய வாழ்வில் புகுந்த பொழுதில்
என்னில் துளிர்விட்ட இளங் குருத்தே
உன்னின் தளிர்முகம் பார்த்தே கலைத்தேன்
மண்ணின் மூளைவிட்ட வித்துகள் விளைவை
கண்ணே! உனக்காக சேர்ந்தேன் சொத்தே!
நீ வளர்ந்து மரமானால் நிழலில்
நீ வைத்துக் காப்பாய் எனநான்
நீர் விட்ட நெல்வயலில் உழைத்தே
நீங்கா ஆவலில் காத்து வளர்த்தேன்!
தான்கற்ற கல்விக்கு பதவிக்கு வாழத்
தாவியே பறந்தாய் வெளிநாடு! நானோ
தாவு கொடி! கொம்பில்லை! வாழ்த்தும்
தாய்ப்பாச பச்சையம் கலந்த மனசு!
நன்றி: காஞ்சி மு.எ.பிரபாகரன், உ.பி.அ.,
தலைமைச் செயலகம்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை பின்தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/