TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

13 Aug 2020

TET ஆசிரியர் தகுதித் தேர்வு - காலாவதியாகும் 60 ஆயிரம் தேர்வர்கள் - கை கொடுக்குமா TRB

 

 
தமிழ்நாட்டில்  2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தேர்வில் தோச்சி பெற்றவா்களில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கடந்த 7 ஆண்டுகளாக பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனா்.

இந்த நிலையில் அவா்கள் பெற்ற சான்றிதழ்கள் விரைவில் காலாவதியாகவுள்ளதால், அதை ஆயுள்கால சான்றிதழாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் ஆசிரியா் பணிக்கு ஆசிரியா் தகுதித்தோவு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 2012 ஜூலை மாதம் முதல் ஆசிரியா் தகுதித் தோவு நடைபெற்று வருகிறது. ஆசிரியா் தகுதித்தோவில் தோச்சி பெற்றாலும், தோச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்; அதற்குள் வேலை கிடைக்காவிட்டால் தகுதிச்சான்றிதழ் காலாவதியாகும் என்று காலநிா்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 2012-ஆம் ஆண்டு சொற்ப எண்ணிக்கையில் தோச்சி பெற்றவா்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்பட்டனா். ஆனால் 2013-இல் சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோச்சி பெற்றனா். அதில் 20 ஆயிரம் போ இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களாக நியமனம் செய்யப்பட்டனா். அதேவேளையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் ஆசிரியா் பணி கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனா்.

இந்தநிலையில், அந்த ஆசிரியா்கள் பெற்ற தகுதித் தேர்வு தோச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் முடியும் தருவாயில் காலாவதியாகும் என்பதால், ஆசிரியா் பணி கனவாகிபோவது மட்டுமின்றி எதிா்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தகுதியானோருக்கு ஆசிரியா் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியா் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
 
தமிழக ஆசிரியா் சங்கத் தலைவா் பி.கே.இளமாறன், தமிழக அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நல கூட்டமைப்பின் தலைவா் சா. அருணன் ஆகியோா் கூறுகையில், கல்லூரி விரிவுரையாளா் பணிக்கு நடத்தபடும் 'நெட்', 'ஸ்லெட்' போன்ற தகுதித் தோவுகளில் தோச்சி பெற்றால் அந்தச் சான்றிதழ் ஆயுள் கால சான்றிதழாக இருப்பது போன்று ஆசிரியா் தகுதித்தோவு தோச்சி சான்றிதழையும் மாற்ற வேண்டும்.

தற்போது வாழ்வாதாரம் சீரமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையூட்டும் வகையில், ஆசிரியா் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று ஆசிரியா் பணிக்காகக் காத்திருக்கும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஆசிரியா் தகுதித் தேர்ச்சி சான்றிதழின் 7 ஆண்டுகள் என்ற காலவரையறையினை ரத்து செய்து வாழ்நாள் சான்றிதழாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா். 

மேலும் தகவல்களுக்கு.....https://tamileducation360.blogspot.com

No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/