இயலாமை காரணமாக அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (கயு 1) துறை
அரசானை (நிலை) எண். 10 நாள்: 13/02.2009,
பொதுப்பணிகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் உடல் தலம் இயலாமை காரணமாக மருத்துவச சான்றின் அடிப்படையில் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
1. அரசாணை (நிலை) எண். 1025, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை, நாள், 22:11.1976;
2. அரசாணை (நிலை) எண், 188, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நுறை, நாள், 19.10.2000,
3. அரசாணை (நிலை) எண்: 42. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை, நாள். 12.03.2007,
ஆணை;
மேலே 1-இல் படிக்கப்பட்டுள்ள அரசாணையில் மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆண்/பெண் ஆகியோரின் அளிக்கப்பட்டுள்ளது. வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமன சலுகைள் மேலே 2-இல் படிக்கப்பட்டுள்ள அரசாணையில் மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பு 50லிருந்து 53 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
3. இந்நிலையில், கருணை அடிப்படையில் பணி நியமனங்களக்குத் தடையாணை பிறப்பிக்கப்பட்டு அத்தடையானது அரசாணை (நிலை) எண், 16, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 21.02.2006 ல் விலக்கி கொள்ளப்பட்டு, அரசாணை (நிலை) எண். 51, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை, நாள். 19.072005ல் இது குறித்து வழிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
4. உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் பணியாளர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அரசாணை (நிலை) எண். 42. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, நாள். 12.03.2007-ல் கருணை அடிப்படையிலான பணி நியமனம் குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகள்
வெளியிடப்பட்டன.
5. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் 12.03.2007 நாளிட்ட அரசாணை (நிலை) எண். 42. இல் 22.11.1976 நாளிட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அரசாணை (நிலை) எண்.1025, ஆய்வு செய்யப்படவில்லை. மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்களின் மகன்/மணமாகாத மகள் நெருங்கிய உறவினர்களுக்கு கருணை அடிப்படையிலான நோடி பணி நியமன சலுகையினை வேலைவாய்ப்பகங்களில் தொடர்பு கொள்ளாமல் அளிப்பதுபோல், மருத்துவ இயலாமை காரணமாக பணியிலிருந்து ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் வாரிசுதாரர்களின் மகள்/ மணமாகாத மகள்/ நெருங்கிய உறவினர்களுக்கு குடிமைப் பணி ஒழுங்குமுறைகளின் விதி எண்.452 மற்றும் 454 விதிகளுடன் படிக்கப்பட்ட விதி எண். 441-இன்படி கருணை அடிப்படையிலான பணி நியமனம் வழங்கப்பட்ட இச்சலுகையினை மைய அரசு மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கும் விரிவுபடுத்தியது.
6.மருத்துவ இயலாமை காரணமாக பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமனம் வழங்கமுடியாது என்றும், மரணமடையும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு மட்டுமே கருணை அடிப்படையிலான பணிநியமனம் வழங்கமுடியும் என்றும், மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் வாரிசுக்கு பணி நியமனம் வழங்கப்பட்ட ஆணையினை ரத்து செய்து ஆந்திர பிரதேச மாநில உயர்நீதிமன்ற முழு பெஞ்ச் சமீபத்தில் அளித்த ஆணையினை எதிர்த்து சிவமூர்த்தி - எதிர் - ஆந்திரபிரதேச மாநில அரசு மற்றும் பலர் ஆந்திர பிரதேச மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கை தொடர்ந்தனர். நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், எஸ்.எஸ்.பாண்டா டிவிசன் பெஞ்ச் அளித்துள்ள தரப்பில் மருத்துவ இயலாமை காரணமாக பணியிலிருந்து ஆகியோர் அடங்கிய ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் அளிக்கும் ஆணை செல்லும் என உச்சநீதிமன்றம் உறுதி செய்தது,
7. மேற்கண்ட சூழ்நிலையில் மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமனம் வழங்குவது குறித்து அரசு கவனமாக பரிசீலித்து இப்பணிநியமனம் ஏற்கனவே அளிக்கப்பட்டவாறு அவர்களின் வாரிசுதாரர்களுக்குப் பணிநியமனம் அளிக்கலாம் எனவும், ஏற்கனவே மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்குப் பணி நியமனம் அளிக்கப்பட்டுள்ளதை பணிவரன்முறை செய்வதை தொடர்ந்து கடைப்பிடிக்கலாம் எனவும். ஏற்கனவே,, ணை (நிலை) எண்: 168, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, நாள், 19:10:2000 இன்படி 1933 அரசாணை மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வுபெறும் அதிகபட்ச வயது வரம்பு 50-லிருந்து 53 ஆக உயர்த்தப்பட்ட ஆணையினை தொடர்ந்து கடைபிடிக்கலாம் எனவும் அரசு ஆணையிடுகிறது. 8. அரசானை (நிலை) எண் 42, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, நாள்: 12:03.2007-ல் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இந்நேர்வுக்கும் பொருந்தும் எனவும் அரசு ஆணையிடுகிறது.
9. இவ்வாணை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் அலுவயர் சார்பற்ற குறிப்பு எண். 21/ஜி2/09, நாள்: 07.01.2009 மற்றும் சட்டத்துறையின் அலுவல் சார்பற்ற குறிப்பு எண் 549/09, நாள் 03.02.2009-இல்பெறப்பட்ட ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.
for download g.o click here
for more details join my whatsapp group
for more details join my telegram group
Tamil Education 360 Team.
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/