TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

20 Sept 2021

*#01 TNPSC History சிந்து சமவெளி நாகரிகம்... பாடக்குறிப்புகள் மற்றும் முக்கிய கேள்விகள்...*

 

சிந்து வெளி நாகரிகம்


  1. சிந்து வெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு – 1921
  2. மனித இனம் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் இடம் – இலெமூரியா
  3. ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர் – சப்த சிந்து
  4. இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் தந்தை – அலெக்ஸாண்டர் கன்னிங்காம்.
  5. இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம் – சிந்து சமவெளி நாகரிகம்
  6. சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம் – இரும்பு
  7. சிந்துவெளி மக்களின் எழுத்து முறை – சித்திர எழுத்து முறை
  8. சிந்து சமவெளி எழுத்துக்களுக்கு pictograph என்று பெயர்.
  9. எழுதும் முறை – வலமிருந்து இடமாகவும், இரண்டாவது வரியை இடமிருந்து வலமாகவும் எழுதினர்.
  10. உலகத்திலேயே சிந்து சமவெளியில் தான் பருத்தி முதன் முதலாகப் பயிரிடப்பட்டது.பருத்திக்குக் கிரேக்க மொழியில் சிந்தோன் என்று பெயர்.
  11. சிந்து சமவெளி மக்கள் பலவிதமான சின்னங்களை வியாபாரத்திற்கு பயன்படுத்தினர்
  12. சிந்து சமவெளி மக்கள் விளையாட்டுப் பொருள்கள் செய்ய சுடுமண் பயன்படுத்தினர்.
  13. சிந்து சமவெளி மக்கள் அறியாத விலங்கு – குதிரை
  14. சிந்து சமவெளி முத்திரைகள் 10 வகையான வடிவங்களில் கிடைத்துள்ளன.
  15. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மிகவும் பெரிதாக எழுதப்பட்டுள்ள எழுத்தின் நீளம் 37 செ.மீ.
  16. ஹரப்பாவிற்கும் மொகஞ்சதாரோவிற்கும் இடைத்தூரம் – 400 மைல்
  17. மக்கள் ஓய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடினர்.
  18. இசை, நடனம், கோழிச் சண்டை, காளைச் சண்டை போன்றவை நடைபெற்றது.
  19. சிந்து சமவெளி கிணறுகள் 65 அடி ஆழத்துடன் இருந்துள்ளன.
  20. மஞ்சிட்டி என்ற நீர்ப்பூண்டு வகையைப் பயன்படுத்திச் சிந்து சமவெளி மக்கள் துணிகளுக்குச் சிவப்பு நிறத்தை ஏற்றியிருக்கிறார்கள்.
  21. குழந்தைகள் விளையாடச் சக்கரம் கொண்ட பொம்மைகள், குட்டி வண்டியில் பொருத்தப்பட்ட பொம்மைகள் கிடைத்துள்ளன.

ஹரப்பா நாகரிகம்:

  1. ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை  – கி.மு.3250 -கி.மு 2750
  2. ஹரப்பா ராவி நதிக்கரையின் மேல் மாண்ட்கோமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  3. ஹரப்பா நகரத்தை கண்டுபிடித்தவர் – ராய் பகதூர் தயாராம் சஹானி(1921)
  4. ஹரப்பா நகர நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது – செம்பு கற்காலம்
  5. ஹரப்பா என்ற சொல்லின் பொருள் – புதையூண்ட நகரம்
  6. ஹரப்பா நாகரிகம் எந்த நாகரிகம் – நகர நாகரிகம்
  7. ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள் – பசுபதி (சிவன்)
  8. டெரக்கோட்டா என்பது – சுடு மண்பாண்டம்
  9. இதில் மிகப்பெரிய தானியக் களஞ்சியங்கள் 6 உள்ளன.இது 71மீ நீளமும்23மீ அகலமும் கொண்டது.
  10. இம்மக்கள் எருதுகளை வணங்கினர்.பருத்தி பயிரிட்டனர்.
  11. 16 மற்றும் அதன் மடங்குகளைப் பயன்படுத்தினர்.
  12. ஹரப்பா பண்பாட்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு முத்திரைகள் ஆகும்.
  13. முத்திரைகளில் காளையின் உருவங்களும் பிறவிலங்குகளின் உருவங்களும் காணப்படுகின்றன. வியாபாரதிற்கு இவர்கள் முத்திரைகளை பயன்படுத்தினர்.
  14. முக்கிய உணவு – கோதுமை, பார்லி
  15. ஹரப்பாவில் வெண்கல அளவு கோல் கண்டறியப்பட்டுள்ளது.

மொகஞ்சதாரோ நாகரிகம்:

  1. மொகஞ்சதாரோவை கண்டுபிடித்தவர் – பானார்ஜி(1922)
  2. மொகஞ்சதாரோ என்னும் சிந்தி மொழிச் சொல்லின் பொருள் – இடுகாட்டு மேடு
  3. சிறப்பான கழிவுநீர் வெளியேற்ற வசதி உள்ளது.
  4. கால்வாய்கள் சுண்ணாம்புக் கலவை, சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சம் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
  5. மொகஞ்சதாரோவில் பெரிய குளியல் குளம் ஒன்று உள்ளது.இது8மீ நீளமும், 7.01மீ அகலமும் 2.4மீ ஆழமும் கொண்டது.
  6. ஆடை மாற்றும் அறை காணப்பட்டது.இக்குளத்தில் நீர்வர செங்கல்லானா குழாய்கள் உள்ளன. நீருக்குள் செல்ல அகலமான படிக்கட்டுகள் இருந்தன.
  7. நகரங்கள் 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  8. மேல்பகுதி (அல்லது) சிட்டாடல் மற்றும் கீழ்பகுதி.
  9. மேல்பகுதியில் – பொதுக் கட்டிடங்கள், தானியக் கிடங்குகள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமயக் கட்டிடங்கள் உள்ளன.
  10. கீழ்பகுதி – மக்கள் வாழ்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  11. கோதுமை, பார்லி, கேழ்வரகு, பட்டாணி, எள், கடுகு, அரிசி(லோத்தல்), பருத்தி,பேரீச்சம்பழம், தர்பூசணி மற்றும் பிற பயிரிடப்பட்டன.
  12. மரத்தாலான கலப்பைகள் பயன்படுத்தபட்டன.
  13. ஆயுதங்கள் பெரும்பாலும் தாமிரம் மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்டன.
  14. வெண்கலத்தை உருவாக்க ராஜஸ்தானில் கேத்ரி மற்றும் பலுசிஸ்தான் ஆகியவற்றில் தாமிரமும், ஆப்கானிஸ்தானிலிருந்து தகரம் பெறப்பட்டன.
  15. ஆடைகளில் அதிகமாக ஆபரணங்கள் (தங்கம், வெள்ளி, தந்தம் மற்றும் தாமிரம்) பயன்படுத்தப்பட்டன.
  16. மண்பாண்டம் செய்யும் சக்கரம் பயன்பாட்டிலிருந்தது.
  17. மண்பாண்டங்கள் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திலிருந்தன.
  18. தாயக்கட்டை விளையாட்டு விளையாடினர்.
  19. மொஹஞ்சதாரோவில் நடனமாடும் மங்கையின் வெண்கல உருவம் கண்டெடுக்கப்பட்டது.
  20. அறுவடைக்காக, அரிவாள் போன்ற கருவிகள் பயன்படுத்தினார்கள். இவை பெரும்பாலும் கற்களாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்டிருந்தன.
  21. அன்றைய கால முத்திரைகளிலும், ஓவியங்களிலும் காளை மாடுகளின் உருவம் முக்கிய இடம் பெறுகிறது.
  22. ஆடுகள், யானைகள், ஒட்டகங்கள், கழுதைகள், நாய்கள், பூனைகள் ஆகியவை வளர்க்கப்பட்டன.
  23. ஆட்டு இறைச்சி உணவானது. அதன் ரோமம் குளிர்கால உடைகளின் மூலப் பொருளானது.
  24. வீட்டுக் காவலுக்கு நாய்கள்.தானியங்களைச் சூறையாடும் எலிகளை அழிக்கப் பூனைகள் வளர்க்கப்பட்டன.
  25. முக்கிய உணவுகள்: கோதுமை, பார்லி, திணை, பால், மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன்
  26. முக்கியத் தொழில்கள்: விவசாயம்,வேட்டையாடுதல், மீன் பிடித்தல்
  27. எருமையை ஒரு மனிதன் வேட்டையாடும் முத்திரைச் சின்னங்கள் கிடைத்துள்ளன.
  28. இன்னும் பல முத்திரைகளில் மீன், படகுகள், வலை ஆகிய உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
  29. உயர் மட்டத்தினர் மட்டுமே பருத்தி ஆடைகள் அணிந்தனர். எளிய மக்கள் சணல், கம்பளி ஆடைகளைப் பயன்படுத்தினார்கள்.
  30. மொஹஞ்சதாரோவின் மிகப்பெரிய கட்டட அமைப்பு –  தானியக் களஞ்சியம்.இது 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்டது.
  31. சமூகக் கூடமும் மாடிக்கட்டிடமும் காணப்பட்டன.

காளிபங்கன்:

  • ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது.
  • காளிபங்கன் சரஸ்வதி நதிக்கரையில் (காக்கரா) மீது அமைந்துள்ளது.
  • உழவுத் தொழில் மேற்கொள்ளப்பட்டது.

லோத்தல்:

  • எஸ்.ஆர்.ராவ் என்பவரால் 1957ல் கண்டுபிடிக்கப்பட்டது.
  • குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாநிலத்தில் உள்ளது.
  • சிந்து சமவெளி நாகரிகத்தின் வாணிகத் துறைமுக நகரம்.இது பாக்குவார் நதிக்கரையின் மீது அமைந்துள்ளது.
  • இது வெளிநாட்டுடன் தொடர்புடையது.
  • இது மனிதனால் உருவாக்கப்பட்டது.இந்நாகரிகம் ஆரியர் வருகை அல்லது ஆற்று வெள்ளத்தால் அழிந்திருக்கக்கூடும்.

ரூப்பர்:

  • இது பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
  • ஹரப்பா அல்லது அதற்கு முந்தைய காலத்தைச் சார்ந்தது.
  • 1953-ல் ஒய்.டி.சர்மா என்பவரால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது.
  • திட்டமிட்ட நகர அமைப்பைக் கொண்டது.பெரிய பகுதிகள் சாலைகளால் அமைக்கப்பட்டன.குறிப்பிட்ட இடைவெளிகளில் காணப்பட்ட தெருவிளக்குத் தூண்கள் தெருவிளக்கு அமைப்பைக் காட்டுகின்றன.
Previous year TNPSC questions related this topic.

Question 1
அகழ்வு  ஆராய்ச்சிக்கு ராவி நதிக்கரையில் அகழ்வு ஆராய்ச்சி செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் என்பதை கண்டறிந்த ஆண்டு எது?
A
1920
B
1921
C
1922
D
1923

Question 2
ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு என்ன பொருள்?
A
காலிபங்கன்
B
இடுகாடு மேடு
C
லோத்தல்
D
புதையுண்ட நகரம்

Question 3
ஹரப்பா நகரம் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது?
A
சுமார் 3,700
B
சுமார் 2,700
C
சுமார் 4,700
D
சுமார் 5,700

Question 4
மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா என்னும் இடத்தில் ஆராய்ச்சி செய்தவர்?
A
G.F.டேல்ஸ்
B
சர் ஜான் மார்ஷல்
C
M.S.வாட்ஸ்
D
J.M.மக்கெ

Question 5
ஹரப்பா தற்போது எங்கு உள்ளது?
A
பஞ்சாப்
B
பாகிஸ்தான்
C
காலிபங்கன்
D
குஜராத்

Question 6
சிந்து சமவெளி காலம்?
A
கி.பி.3250 முதல் கி.பி.2750 வரை
B
கி.மு.3250 முதல் கி.மு.2750 வரை
C
கி.மு.3550 முதல் கி.மு.2750 வரை
D
கி.மு.3200 முதல் கி.மு.1750 வரை

Question 7
லோத்தல் என்னும் துறைமுகம் எங்கு உள்ளது?
A
பஞ்சாப்
B
பாகிஸ்தான்
C
காலிபங்கன்
D
குஜராத்

Question 8
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி?
  1. சிந்து சமவெளி நாகரிகத்தில் உள்நாட்டு வணிகம் மட்டும் இருந்தது.
  2. சிந்து சமவெளி நாகரிகத்தில் அளவு கோலும், எடைக்கற்களும் பயன்பாட்டில் இருந்தது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு

Question 9
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சிந்து சமவெளி நாகரிகத்தில் இரு அறைகள் கொண்ட சிறு வீடுகள் முதல் மாடி வீடுகள் வரை பலவிதமான கட்டிடங்கள், மண்டபம், தானியக் களஞ்சியம் போன்ற பொதுக்கூடங்களும் இருந்தன.
  2. சிந்து சமவெளி நாகரிகத்தில் வீடுகள் வரிசையாகவும் ஒழுங்காகவும் நேர்த்தியுடனும் கட்டப்பட்டிருந்தன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு

Question 10
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சிந்து சமவெளி மக்கள் இரும்பை பயன்படுத்தி களைப்பையும், அறிவாளியும் செய்தனர்.
  2. சுடுமண் சுதையுனால் வேகவைக்கப்பட்ட சின்னங்கள் வியாபாரத்தில் பயன்படுத்தப்பட்டன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு

Question 11
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. சிந்து சமவெளி நாகரிகத்தில் பொதுவாக வீடுகளில் ஜன்னல்கள் இல்லை.
  2. ஒவ்வொரு வீட்டிலும் கிணறு இருந்தன ஆனால் குளியலறை இல்லை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு

Question 12
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று: 1 : சிந்து சமவெளி நகரங்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன. கூற்று : 2 பொதுவாக நகரின் வடப்பகுதி குறுகலாகவும் உயரமாகவும் இருந்தது.
A
1 மற்றும் 2 இரண்டும் சரி, மேலும் 2 என்பது 1விற்கு சரியான விளக்கம்.
B
1 மற்றும் 2 இரண்டும் சரி, மேலும் 2 என்பது 1விற்கு சரியான விளக்கமல்ல.
C
1 சரி அனால் 2 தவறு
D
1 தவறு அனால் 2 சரி

Question 13
மொஹெஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு என்ன பொருள்?
A
கோட்டைப் பகுதி
B
இடுகாட்டு மேடு
C
காலிபங்கன்
D
புதையுண்ட நகரம்

Question 14
சிந்து சமவெளி நகரின் உயரமான கோட்டை பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
சீட்டாடல்
B
கோட்டைப்பகுதி
C
புதையுண்ட நகரம்
D
காலிபங்கன்

Question 15
தானியக் களஞ்சியம், மக்கள் கூடும் நகர மன்றம் இருந்த பகுதி எது?
A
கோட்டைப்பகுதி
B
சீட்டாடல்
C
புதையுண்ட நகரம்
D
காலிபங்கன்

Question 16
மொஹஞ்சதாரோவில் உள்ள மிக பெரிய கட்டிடம் எது?
A
சீட்டாடல்
B
நகர மன்றம்
C
கோட்டைப்பகுதி
D
தானியக் களஞ்சியம்

Question 17
கீழ்கண்ட வாக்யங்களைக் கவனி:
  1. சிந்து சமவெளி நகரின் நகர நிருவாகம் (உள்ளாட்சி அமைப்பு ) சிறப்பாக செயல்பட்டிருந்தது.
  2. சிந்து சமவெளி மக்கள் பாபிலோனியா, சுமேரிய, எகிப்து மெசபடோமியா போன்ற நாடுகளுடன் கடல் வணிகம் செய்தனர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு

Question 18
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சிந்து சமவெளி மக்களிடம் தொழில்நுட்பங்கள் நடைமுறையில் இருந்தன.
  2. கால்வாய் சந்திப்புகள் திறந்து பழுதுபார்க்கும் முடிகளும் அமைந்து இருந்தன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு

Question 19
ஆயுதங்கள், வீட்டுச்சாமான்கள், கருவிகள் முதலியானவற்றைச் செய்ய பயன்படுத்திகிய உலோகம்?
A
தங்கம்,வெள்ளி
B
செம்பு, வெண்கலம்
C
தங்கம், செம்பு
D
வெள்ளி , வெண்கலம்

Question 20
அணிகலன்கள் செய்ய பயன்படுத்திய உலோகம் எது?
A
தங்கம்,வெள்ளி
B
செம்பு, வெண்கலம்
C
தங்கம், செம்பு
D
வெள்ளி , வெண்கலம்

Question 21
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. எடைகள் இரும்பினால் தயாரிக்கப்பட்டிருந்தன.
  2. செவ்வக வடிவிலான முத்திரைகளில் சித்திர வடிவிலான எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.
  3. களிமண் முத்திரைகளில் காளைகள், வண்டி, புறா, படகுகள் யோகமுத்திரையில் அமர்ந்துள்ள ஒருவரின் வடிவம், சுடுமண் உருவப் பொம்மைகள் முதலியன காணப்படுகின்றன.
A
1,3 மட்டும் சரி
B
1,2 மட்டும் சரி
C
2 மற்றும் 3 சரி
D
2 மற்றும் 3 தவறு

Question 22
கீழ்கண்ட வாக்கியங்களில் எழுத்து முறை தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. . சுட்ட களிமண் பலகைகளின் மீது சித்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
  2. ஒவ்வொரு சித்திரமும், ஒரு குறிப்பிட்ட கருத்தைப் புலப்படுத்துகின்றது.
  3. ஏடுகளில் வரிகள் வலப்பக்கத்துலிருந்து இடப்பக்கமாகவும், இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகவும் எழுதப்பட்டுள்ளன.
  4. இவ்வெழுத்துக்கள் தோல்- தமிழ் எழுத்துடன் உறவுடையன என்று கூறப்படுகிறது.
A
1,2 மற்றும் 3
B
2,3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4

Question 23
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. நெற்பயிரை முதன்முதலில் விளைவித்தவர்கள் சிந்து சமவெளி மக்கள்.
  2. விவசாயம் மக்களின் முக்க்கிய தொழிலாகும்; பார்லி போன்றவற்றை விளைவித்தனர்; மிஞ்சிய தனியங்களைக் களஞ்சியங்களில் சேமித்து வைத்தனர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் சரி

Question 24
சுடு மட்பாண்டத் தொழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
சீட்டாடல்
B
டெர்ரா கோட்டா
C
காலிபங்கன்
D
சித்திர எழுத்துக்கள்

Question 25
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. தங்கம், வெள்ளி, தந்தம், விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை அணிகலன்கள் செய்யப் பயன்படுத்தினர்.
  2. ஏழை மக்கள் கிளிஞ்சல், தாமிரம் போன்றவற்றால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தனர்.
  3. பெண்கள் மட்டும் அணிகலன்களை அணிந்தனர்.
A
1 மட்டும் சரி
B
1,2 சரி 3 தவறு
C
2 மற்றும் 3 சரி
D
2 மற்றும் 3 தவறு

Question 26
சிந்து சமவெளி மக்களின் புனித மரம் எது?
A
ஆலமரம்
B
அரசமரம்
C
வேம்பு
D
தென்னை

Question 27
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. கூற்று 1 : மொஹெஞ்சதாரோவில் கண்டு எடுக்கப்பட்ட பொருட்கள் அங்கு வாழ்ந்த மக்களின் சம்யக் கோட்பாடுகளையும், சமயப்பற்றினையும் அறிவிக்கின்றன.
  2.  காரணம் 2: பசுபதி என்ற சிவனையும், பெண் கடவுளையும், லிங்கம், சூலம், மரம் முதலியானவற்றையும் வணங்கினர்.
A
1 மற்றும் 2 இரண்டும் சரி, மேலும் 2 என்பது 1 விற்கு சரியான விளக்கம்.
B
1 மற்றும் 2 இரண்டும் சரி, மேலும் 2 என்பது 1 விற்கு சரியான விளக்கமல்ல.
C
1 சரி ஆனால் 2 தவறு
D
1 தவறு ஆனால் 2 சரி

Question 28
வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச்சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது?
A
சீட்டாடல்
B
புதையுண்ட நகரம்
C
கலிபங்கன்
D
மொகஞ்சதாரோ

Question 29
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. . மக்கள்  பருத்தி ஆடைகள் மட்டும் அணிந்தனர்.
  2.  வேட்டி கீழ் ஆடையாகவும், சால்வையை மேல் ஆடையாகவும் அணிந்தனர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு

Question 30
கீழ்கண்ட வாக்கியங்களில் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பானவற்றை கவனி:
  1. எழுத்துப்பணி செய்வோர், முத்திரைகள் தயாரிப்போர், கட்டடப் பணியாளர்கள், மரச்சாமான்கள், பொம்மைகள் படைப்போர் மற்றும் பிற கைவினைஞர்கள் எனது தொழிலாளர்கள் பலர் இருந்தனர்.
  2. 2.விளையாட்டுப் பொருள்கள் இங்கு காணப்படவில்லை.
  3. காளை, குதிரை, எருது, ஆடு, பன்றி, கழுத்தை, ஒட்டகம் போன்ற கால்நடைகள் வளர்த்தனர்.
A
1,3 மட்டும் சரி
B
1,2 மட்டும் சரி
C
2 மற்றும் 3 சரி
D
2 மற்றும் 3 தவறு

Question 31
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சிந்து சமவெளி மக்களுக்கு மறுபிறவி நம்பிக்கை இருந்தது.
  2. 2. இறந்தவர்களை புதைக்கும் போது உணவு, அணிகலன்களையும் சேர்த்துத் தாழிகளிலிட்டுப் புதைத்தனர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு

Question 32
வரிசையான குடியிருப்புகள் காணப்படுகின்றன. அங்கு ?
A
தொழிலாளிகள் வசித்தனர்
B
நகராட்சி நிருவாகப்பணியாளர்கள் வசித்தனர்
C
ஆளும் குழுவைச் சேர்ந்தவர்கள் வசித்தனர்
D
கைத்தொழிலாளிகள் வசித்தனர்.
Question 33
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. கூற்று 1: பொதுக் கழிவு நீர் திட்டம், பொதுக்குளம், பொதுமண்டபம், தெரு விளக்குகள், தெருக்களில் குப்பைத்தொட்டிகள் காணப்படுகின்றன.
  2. காரணம் 2: நகரங்களை ஆட்சி செய்ய உரிய நிருவாக அமைப்பு இருந்திருக்க கூடும்.
A
1 மற்றும் 2 இரண்டும் சரி, மேலும் 2 என்பது 1 விற்கு சரியான விளக்கம்
B
1 மற்றும் 2 இரண்டும் சரி, மேலும் 2 என்பது 1 விற்கு சரியான விளக்கமல்ல
C
1 சரி ஆனால் 2 தவறு
D
1 தவறு ஆனால் 2 சரி
Question 34
இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குவது எது?
A
சிந்து சமவெளி நாகரிகம்
B
கங்கைச் சமவெளி நாகரிகம்
C
சங்ககால நாகரிகம்
D
இவற்றுள் ஏதுமில்லை
Question 35
சிந்து மாகாணம் லர்காணா மாவட்டத்தில் மொகஞ்சதாரோ நகரம் தோண்டி எப்போது எடுக்கப்பட்டது?
A
1920
B
1921
C
1922
D
1923
Question 36
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சிந்துவெளி குளம் மெழுகு பூசிய சுட்ட செங்கர்களால் நீர் கசியாமல் இருக்குமாறு இணைத்துக் கட்டப்பட்டிருந்தனர்.
  2. குளத்திலிருந்து அழுக்கு நீர் வெளியே செல்லவும் தனி கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு

Question 37
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சிந்துவெளி மக்கள் கடல்வழி வாணிகம் செய்து உலோகங்கள், விலையுயர்ந்த கற்கள், அணிகலன்கள் மற்றும் பல்வேறு பயன்பட்டுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்தனர்.
  2. சிந்துவெளியில் பயிர்த்தொழிலாளர், கைத்தொழிலாளர், வணிகர், நெசவாளர்கள், மண்பாண்டங்கள் செய்வோர், உலோக வேலை செய்வோர் எனப் பலவகைப்பட்ட மக்கள் காணப்பட்டனர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு

Question 38
இந்தியாவில் மிக தொன்மை வாய்ந்த நகர நாகரிகமான சிந்துசமவெளி (ஹரப்பா) நாகரிகம் எந்த காலத்தில் செழித்திருந்தது.
A
செம்புக் காலம்
B
இரும்புக்காலம்
C
பெருங்கல் காலம்
D
இவற்றில் ஏதும் இல்லை

Question 39
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சிந்துவெளி நாகரிகத்தில் பயன்பாட்டு அறிவியல் நடைமுறையில் இருந்தது.
  2. சிந்துவெளி நாகரிகத்திலும் கோதுமையும், பார்லியும் முக்கிய உணவாகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு

Question 40
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. அகன்ற சாலைகள் இருமருங்கிலும் வீடுகள் சீராகக் கட்டப்பட்டு இருந்தன.
  2. தளம் அமைத்த வீடுகள் இருந்தபோதும் அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படவில்லை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Courtesy Exams Daily and Tnpsc tricks.

Kindly share and support us.



Tamil Education 360 Team.

No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/