TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

1 Sept 2021

இனி, +2வில் வேளாண்மை & வணிகம் படித்த மாணவர்களும் என்ஜினியரிங் படிக்கலாம்.... AICTE

ஹைலைட்ஸ்:
12ம் வகுப்பில், கணிதம் மற்றும் இயற்பியல் படித்தவர்கள் தான் பி.இ. பி.டெக் படிக்கும் நிலை இருந்தது. AICTE வெளியிட்ட புதிய அறிக்கையில், இனி 12வில் வேளாண்மை மற்றும் வணிகம் படித்த மாணவர்களும் பொறியியல் படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணிதம் இல்லாத படிப்புகளை 12 ஆம் வகுப்பில் எடுப்பவர்கள் பொறியியல் படிக்க முடியாது என்கிற நிலை இருந்து வந்தது. இதனால் வெகு நாட்களாக கணிதம் இல்லாத பாடங்களை படிக்கும் மாணவர்கள் பொறியியல் படிக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்தியாவின் தொழில்நுட்ப கல்விக்கான சட்ட ரீதியான அமைப்பானது (ஏ.ஐ.சி.டி.ஐ அல்லது தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்) இப்போது வரும் 2021- 2022 கல்வி ஆண்டிற்கான பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளில் சேருவதற்கு 12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் படித்திருக்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில் தற்சமயம் பல்வேறு பாடங்களையும் இதற்கு தகுதி பாடங்களாக ஆக்கியுள்ளது.

இளங்கலை பொறியியல் படிப்பதற்கு 12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் கட்டாயமாக பயின்றிருக்க வேண்டும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இப்போது ஏ.ஐ.சி.டி.இ ஆனது 2021 மற்றும் 2022 ஆம் கல்வியாண்டிற்கான செயல்முறை கையேட்டை வெளியிட்டுள்ளது. இந்த கையேட்டில் பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை தகுதியில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஏ.ஐ.சி.டி.இ யின் இந்த அற்புதமான நடவடிக்கையானது பொறியியல் கல்வியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொறியியல் சேர்க்கையில் தகுதி பெறுவதற்கு கீழ்க்காணும் பாடங்களில் ஏதேனும் 3 பாடங்களில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அவை
இயற்பியல்
கணிதம்
வேதியியல்
கணினி அறிவியல்
எலக்ட்ரானிக்ஸ்
தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி)
உயிரியல்
தகவல் நடைமுறைகள் (informative practices)
பயோடெக்னாலஜி
தொழில்நுட்ப பாடங்கள்
வேளாண்மை
பொறியியல் இயற்பியல்
வணிக ஆய்வுகள்
தொழில் முனைவோர்
ஆகியவை ஆகும்.
மேலே குறிப்பிடப்பட்ட பாடங்களில் மாணவர்கள் பொதுப்பிரிவினர் 45 சதவீதம் மதிப்பெண்களும் இடஒதுக்கீடு பெற்றவர்கள் 40 சதவீதம் மதிப்பெண்களும் பெற வேண்டும்.


மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை பெற தொடர்பு கொள்ளவும்.... https://tamileducation360.blogspot.com

No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/