_*தலைமையாசிரியர் பணி மாறுதல் கவுன்சிலிங் இம்மாதம் இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....*_
அரசு உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிட விபரங்களை, உட னடியாக அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. பணிக்காலம் மட்டும் நீட்டிக் கப்பட்டது. இந்நிலையில், விருப்ப ஓய்வு, இறப்பு காரணமாக ஏற்பட்ட காலியிடங்களால், பள்ளிகளில் நிர்வாக பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர் பயிற்றுனர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, அரசு உயர்நிலைப்பள்ளி தலை மையாசிரியர் காலியிடங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் பணியிடங்களுக்கே முதலில் கலந்தாய்வு நடத்தப்படுவதால், விரைவில் விபரங்களை அனுப்பு மாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.
காலியிட விபரங்கள் திரட்டுவதால், இம்மாத இறுதிக்குள் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
Click here to join whatsapp group
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/