TAMIL EDUCATION 360

இரு கை கூப்பி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.... இரு கை உன்னை வணங்கும் கடவுளாக....

Search This Blog

JOIN WITH US IN WHATSAPP GROUP

9 Oct 2021

*அரசு ஊழியர்களுக்கான காப்பீடு கூடுதல் தொகையை வசூலித்தால் கடும் நடவடிக்கை...நிதித் துறை கடும் எச்சரிக்கை..*

அரசு ஊழியர்களுக்கான காப்பீடு கூடுதல் தொகையை வசூலித்தால் கடும் நடவடிக்கை...

நிதித் துறை கடும் எச்சரிக்கை..

அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பும் போது கூடுதல் தொகைகளை வசூலிக்கக் கூடாது என்று நிதித் துறை கூடு தல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். அப்படி வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்த கோரிக்கை மனுவை தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் அதி காரிகள் சங்கத்தினர் அரசிடம் அளித்திருந்தனர். இந்த மனுவுக்கு பதிலளித்து நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், அனுப்பிய கடிதம்:

அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பணம் இல் லாமல் அங்கீகரிக்கப்பட்ட மருத் துவமனைகளின் வழியே மருத் துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழகம், புதுச்சேரி, பெங்களூரு, திருவனந்தபுரம், புது தில்லி போன்ற பகுதிகளில் உள்ள
மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. சிகிச்சைக ளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகைகளைக் காட்டிலும் கூடு தல் கட்டணம் வசூலிக்கப்படுவ தாக புகார்கள் கூறப்படுகின்றன.

மருத்துவ சிகிச்சைகளுக்காக வரையறை செய்யப்பட்ட கட்ட ணத்தை விட கூடுதலான கட்ட ணத்தை வசூல் செய்யும் மருத்துவ மனைகள் மீது காப்பீட்டு நிறுவ னங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பயனாளர் களிடம் இருந்து புகார்கள் வரப் பெற்றால் சம்பந்தப்பட்ட மருத் துவமனைகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். மேலும் கூடு தலாகச் செலுத்தப்பட்ட கட்ட ணமும் பயனாளிகளுக்கு திருப்பி அளிக்கப்படுவது உறுதி செய்யப் பட வேண்டும்.

காப் பீட்டுத் திட்டத்தை யுனைடெட் இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், காப் பீட்டுத் திட்டத்துக்கான இலவச தொலைபேசி எண்ணை (1800233 5544) பயன்படுத்திக் கொள்ள அறி வுறுத்தவேண்டும்.மருத்துவமனை யில் அனுமதிக்கப்படும் போதும், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போதும் தொலைபேசி எண்ணை பயன்படுத்த அறிவுறுத் தினால் புகார்கள் எழுவதைத் தடுக் கலாம். மருத்துவமனைகளில் கூடு தல் கட்டணம் தொடர்பாக புகார் கள் ஏதும் இருப்பின் அதனை மின் னஞ்சல்(tnnhis_grievance@mdindi a.com) வழியாகத் தெரிவிக்கலாம் என நிதித் துறை கூடுதல் தலை மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tamil Education 360 Team.

No comments:

Post a Comment



Thanks for supporting.... If anything please comment and share.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி

எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/