அடுத்த மாதம் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு
நாடு முழுவதும் நிகழ் கல்வியாண்டுக்கான முதல் பருவ சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர் வுகள் கடந்த ஆண்டு ரத்து செய் யப்பட்டன. அந்தச் சூழல் மீண் டும் ஏற்படுவதைத் தவிர்க்க சிபி எஸ்இ நிர்வாகம் இரண்டு பரு வத் தேர்வு முறையை அறிமுகப்ப டுத்தியது.
அதன்படி 2021- 2022-ஆம் கல் வியாண்டில் சிபிஎஸ்இ சார்பில் பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக் கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர்- டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பருவத்தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடைபெ - றும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடி யாத சூழலில், ஏற்கெனவே நடத்தப் பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்
படையில் மதிப்பெண்கள் கணக்கி டப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் அறிந்துகொள் ளும் வகையில், மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றியமைக்கப் பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப் பட்டன. இந்தநிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான முதல் பருவ சிபி எஸ்இ பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற் கான கால அட்டவணை விரைவில் cbse.gov.in என்ற இணையத ளத்தில் வெளியாக உள்ளது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் பட்டியலை, ஏற்கெனவே பள்ளிகள் சிபிஎஸ்இ நிர்வாகத்திடம்சமர்ப்பித்துள்ளன. தேர்வு 90 நிமிஷங்களுக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
TAMIL EDUCATION 360 TEAM.

No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/