உதவி செவிலியர் பயிற்சி: நவ.23-க்குள் விண்ணப்பிக்கலாம்...
தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவம னையில் இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு நவம்பர் 23-க்குள் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சி யின் பொதுசுகாதாரத் துறை கட்டுப் பாட்டில் இயங்கும் தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2021-2022-ஆம் ஆண்டு மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும், மாநகராட்சிப் பள்ளி களில் பயின்ற மாணவிகளுக்கும் முன் னுரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் அரசுசார்ந்த பள்ளிகளில் பயின்றமாண விகளும் விண்ணப்பிக்கலாம்.
உதவி செவிலியர் பயிற்சிக்கு பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர், தொற்று நோய் மருத்துவமனை எண்.187, திருவொற்றியூர் நெடுஞ் சாலை, தண்டையார்பேட்டை சென்னை-81 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை நவம்பர் 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 4 அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 23-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் மேற்கண்ட முக வரிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
For Whatsapp Group
No comments:
Post a Comment
Thanks for supporting.... If anything please comment and share.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற எங்கள் வலைதள பக்கத்தை தொடரவும். நன்றி
எங்கள் வலைதள முகவரி https://tamileducation360.blogspot.com/